தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்குறைப்பு செய்யப்பட்ட லசாடா ஊழியர்களுக்கு கூடுதல் நிதியுதவி

2 mins read
1f59de25-f8aa-4438-aa30-37c4fa4b2aed
சிங்கப்பூரில் கடந்த ஜனவரி மாதம் இணைய வர்த்தக நிறுவனமான லசாடா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஜனவரி மாதம் இணைய வர்த்தக நிறுவனமான லசாடா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்கப்படும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் நிதியுதவி குறித்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் லசாடா ஊழியர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

சில ஊழியர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு ஆண்டு சேவையை அடிப்படையாகக் கொண்டு மேலும் கூடுதலாக இரண்டு வார ஊதியத்தை சில நாட்களில் பெறவுள்ளனர். மற்றவர்களுக்கு பயிற்சி ஆதரவு தொகையாக 1,200 வெள்ளி ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் என்று முன்னாள் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆட்குறைப்பு நடந்த போது பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு சேவையை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வார ஊதியத்தை மட்டுமே வழங்குவதாக லசாடா தெரிவித்தது. அது வழக்கத்தை விட குறைவான தொகை.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த நிதி உதவி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உணவு, பானம் ஊழியர்களின் கூட்டணி சங்கம் லசாடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஊழியரின் சேவைக் காலம், ஊழியரின் பதவி, உணவு, பானம் ஊழியர்களின் கூட்டணி சங்கத்தில் ஊழியர் உறுப்பினராக உள்ளாரா என்ற பல தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொழிற்சங்க காங்கிரசில் (என்டியுசி) உள்ள தகுதி பெறும் ஊழியர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் உதவிகள் கிடைக்கும் என்று தலைமைச் செயலாளர் இங் சீ மெங் மே 21ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

லசாடா ஆட்குறைப்பு செய்யும் போது தொழிற்சங்க காங்கிரசிடம் எத்தனை பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விவரத்தை கொடுக்கவில்லை.

சிங்கப்பூரில் குறைந்தது 100 ஊழியர்களை லசாடா ஆட்குறைப்பு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

லசாடா சிங்கப்பூரில் மட்டுமில்லாது மலேசியா, வியட்நாம், இந்தோனீசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் ஜனவரி மாதம் ஆட்குறைப்பு செய்தது.

குறிப்புச் சொற்கள்