தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமரசப் பேச்சில் ‘செம்கார்ப்பின்’ இந்தியக் காற்றாலை நிறுவனம்

1 mins read
f45cf3da-6c2e-4d9b-828b-a7d90a49023e
19.6 பில்லியன் ரூபாய் இழப்பீடு தொடர்பில் ஜிவெல், கேம்சா நிறுவனங்கள் சமரசப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. - படம் : செம்கார்ப்

செம்கார்ப் இண்டஸ்ட்ரீசின் இந்தியக் கிளை நிறுவனமான ‘கிரீன் இன்ஃப்ரா விண்ட் எனர்ஜி லிமிடெட்(ஜிவெல்), அதன் விநியோகிப்பாளரான சீமென்ஸ் கேம்சாயுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சமரசப் பேச்சில் ஈடுபட்டுள்ளது.

300 மெகாவாட் காற்றாலை மின்திட்டத்தின்கீழ், சரக்கு விநியோகம், நிலம், காற்றாலையை நிறுவுதல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நிறுவனங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

கேம்சா தரப்பில் பல்வேறு குறைபாடுகளை எதிர்கொண்டதை அடுத்து ஜிவெல் அந்த ஒப்பந்தத்தை முறித்ததுடன், 8.2 மில்லியன் ரூபாயை (S$134.1 மில்லியன்) இழப்பீடாகக் கோரியது.

அதற்குப் பதிலாக கேம்சா நிறுவனம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் ஜிவெல் நிறுவனம் தனக்கு 19.6 பில்லியன் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று அது கோரியிருந்தது.

செம்கார்ப், அதன் கிளை நிறுவனமான ஜிவெல் இரண்டும், கேம்சாவின் கோரிக்கை அடிப்படை அற்றது என்று கூறுகின்றன.

சமரசப் பேச்சில் ஜிவெல் தரப்பு வலுவான நிலையில் இருப்பதாக அவை கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்