ரியாத்: இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் சிங்கப்பூரின் நிலைப்பாடு குறித்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றம் கூடும்போது முழுமையான விவாதம் இடம்பெறும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
இதன் தொடர்பில் பல கேள்விகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமது சவூதி அரேபியப் பயணத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20), திரு லீ செய்தியாளர்களிடம் பேசினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்த நிலவரத்தை சிங்கப்பூரர்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிவாசிகளின் கவலைகளை மன்றத்தில் எடுத்துரைப்பர் என்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் லீ உள்ளிட்ட தலைவர்கள், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் குறித்தும் காஸாவில் அதிகரிக்கும் மனிதநேய நெருக்கடி குறித்தும் முக்கியமாகக் கலந்துரையாடினர்.
அந்தத் தலைவர்கள் போர் தொடர்பான தங்கள் கவலையையும் அவர்கள் பதிவுசெய்தனர்.

