தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் தீவில் $1பி. செலவில் ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்தி ஆலை

2 mins read
217cf7ae-f5f6-4be2-bec2-3faa3a3e3e7d
அந்த எரிசக்தி ஆலை குறைந்தது 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யக்கூடியது. இது 864,000 நான்கறை வீடுகளின் ஓராண்டு எரிசக்தி தேவையை பூர்த்திசெய்ய போதுமானது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் தீவில் ஹைட்ரஜன் எரிவாயுவை ஒத்த இயற்கை எரிசக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்படவுள்ளது.

இதை உள்ளூர் எரிசக்தி விநியோகிப்பு நிறுவனமான பசிபிக்லைட் பவர் என்ற நிறுவனம் அமைக்கும் என்றும் அது 2029ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை அமைக்க கிட்டத்தட்ட $1 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. இது சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ள ஆகப் பெரிய எரிசக்தி ஆலையாக விளங்கும்.

அத்துடன், இந்த ஆலை 600 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யக்கூடியது என்றும் இது 864,000 நான்கறை வீடுகளின் ஓராண்டு எரிசக்தி தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆலை செயல்படத் தொடங்கும்போது அதில் 30 விழுக்காடு தூய்மையான எரிபொருளான ஹைட்ரஜனுடன் இயற்கை எரிவாயுவும் கலந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் எரிசக்தித் துறை கரியமில வாயு வெளியேற்றமில்லாத தூய எரிசக்திக்கு மாறும் நிலையில் இந்த ஆலை 100 விழுக்காடு ஹைட்ரஜன் எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற ஹைட்ரஜன் எரிவாயு பயன்பாட்டில் செயல்படும் ஒன்பது ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இவற்றில், பசிபிக்லைட் அமைக்க உள்ள இந்த ஆலைதான் ஆகப் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பசிபிக்லைட் நிறுவனத்துக்கு இந்த ஆலையை அமைக்கும் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ஆம் தேதி) எரிசக்தி சந்தை ஆணையம் வழங்கியது.

இவற்றுடன் பசிபிக்லைட் நிறுவனத்தின் இந்த ஆலையுடன் பெரிய அளவிலான மின்கல சேமிப்பு முறையும் இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மின்சாரத் தேவை குறைவாக உள்ள காலங்களில் மின்சாரம் சேமித்து வைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்