துருதுருவென இருக்கும் சிறுவர்களின் உடலுறுதியைச் சோதிக்கவிருக்கிறது சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் ‘ஹைரோக்ஸ் யங்ஸ்டார்ஸ்’ பந்தயம்.
பெரியவர்களின் உடல் வலிமைக்குச் சவால்விடும் ‘ஹைரோக்ஸ்’ பந்தயம், முதன்முறையாக எட்டு வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆசிய நாடுகளில் முதல்முறையாக சிங்கப்பூரில் தொடங்குகிறது சிறுவர்களுக்கான அந்தப் பந்தயம்.
அது, நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடத்தப்படும்.
நான்கு வயதுப் பிரிவுகளில் போட்டி நடைபெறும். எட்டிலிருந்து ஒன்பது வயதுப் பிரிவு. 10லிருந்து 11 வயதுப் பிரிவு, 12லிருந்து 13 வயதுப் பிரிவு, 14லிருந்து 15 வயதுப் பிரிவு.
வெவ்வேறு வயதுப் பிரிவுகளுக்கு ஏற்ப எட்டு உடற்பயிற்சி நிலையங்களில் சிறுவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவேண்டும்.
‘ஹைரோக்ஸ் யங்ஸ்டார்ஸ்’ பந்தயத்தில் பங்கேற்க இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் செய்யலாம்.
அந்தப் பந்தயம் இதற்குமுன் ஆம்ஸ்டர்டேமிலும் லண்டனிலும் நடைபெற்றது.
“ஆசியாவின் முதல் ஹைராக்ஸ் யங்ஸ்டார்ஸ் பந்தயத்தை சிங்கப்பூரில் தொடங்குவது ஒரு சிறப்புமிக்க தருணம். 2024ஆம் ஆண்டு முதல் யங்ஸ்டார்ஸ் தொடக்க நிகழ்வுகளில் ஒன்றை சிங்கப்பூர் நடத்தியது. இன்று நாம் அறிந்திருக்கும் இந்த பந்தய கருத்துருவையும் வடிவத்தையும் உருவாக்குவதில் இப்போதைய பந்தயம் முக்கியப் பங்கு வகித்துள்ளது,” என்றார் ‘ஹைராக்ஸ் யங்ஸ்டார்ஸ்’ குழுவின் தலைவர் ஜெசிகா பெட்டி.
மேல் விவரங்களுக்கு https://hyrox.com/event/hyrox-youngstars-singapore/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
