தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ தமது தொகுதியிலேயே இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அவரது தொகுதி அண்மையில் தெம்பனிஸ் சாங்காட் தனித்தொகுதியாகப் பிரிக்கப்பட்டது.
தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகக் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பார்த்துக்கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்று திரு சூ விளக்கமளித்தார்.
தாம் ஏற்கெனவே பத்து ஆண்டுகளாக தெம்பனீஸ் தொகுதியில் சேவையாற்றி வருவதைச் சுட்டிய அவர், வாய்ப்பு கிடைத்தால் அந்தத் தொகுதியையே பிரதிநிதிக்க விரும்புவதாகச் சொன்னார்.
தெம்பனீஸ் சாங்காட் தொகுதி தனியாகப் பிரிக்கப்பட்டபோது அவர் தொடர்ந்து அங்குச் சேவையாற்றுவார் என்று பல குடியிருப்பாளர்கள் எதிர்பார்ப்பதையும் திரு சூ சுட்டினார்.
தெம்பனீஸ் குழுத்தொகுதி, தெம்பனீஸ் சாங்காட் தனித்தொகுதிக்கான வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

