குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் தானியக்கக் குடிநுழைவுச் சோதனை தடங்கள்

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் தானியக்கக் குடிநுழைவுச் சோதனை தடங்கள்

1 mins read
f2a9ede8-ba9b-4e50-9925-25faa245ced0
படம்: குடிநுழைவுச் சோதனை சாவடி -

உலக நாடுகள் அவற்றின் எல்லைகளை சென்றாண்டு மீண்டும் திறந்துவிட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் அதிகமான தானியக்கக் குடிநுழைவுச் சோதனைத் தடங்கள் திறக்கப்பட்டன.

தானியக்கக் குடிநுழைவுச் சோதனை திட்டத்தின்கீழ், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வரும் வெளிநாட்டுப் பயணிகள் தானியக்கக் குடிநுழைவுச் சோதனை முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டம் சென்றாண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையை பயன்படுத்த முன்பதிவு தேவையில்லை.

அதோடு சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், நான்கு பேர்வரை உள்ள குடும்பங்கள் ஆகியோரும் சாங்கி விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவுச் சோதனை முறையை பயன்படுத்தலாம். முன்னதாக அவர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை குடிநுழைவுச் சோதனை அதிகாரியிடம் சோதனைக்கு கொடுக்கவேண்டும்.

சென்றாண்டு சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 125 தானியக்கக் குடிநுழைவுச் சோதனை தடங்கள் அமைக்கப்பட்டன. இந்தாண்டுக்குள் மேலும் 61 தடங்கள் அமைக்கப்படும்.