தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனுமதி அட்டைகள்; 27 பேர் கைது

1 mins read
f6c475ba-6742-4644-8ac7-18072e217c04
படம்: மனிதவள அமைச்சு -

சிங்கப்பூருக்குள் வெளிநாட்டு ஊழியர்களை வரவழைக்க சட்டவிரோதமாக வேலை அனுமதி அட்டைகளைப் பெற உதவிய மோசடிக் கும்பல் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தீவு முழுவதும் அதிகாரிகள் நடத்திய இரண்டு நாள் சோதனையில் 27 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கிட்டத்தட்ட 290 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனுமதி அட்டை வாங்கி தந்துள்ளனர்.

நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு உள்ளூர் ஊழியர்கள் இருந்தால் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடியும்.

அதனால் நிறுவனங்களில் சிங்கப்பூரர்களைப் போலியாக சேர்த்து அவர்களுக்கு மாதம் மாதம் மத்திய சேமநிதிக் கணக்கில் பணத்தை போட்டுள்ளனர் சந்தேக நபர்கள்.

உணவங்காடிகள், வீடுகள், அலுவலகங்கள் என 19 இடத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மடிக்கணினி, கைப்பேசி உட்பட 80 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்