கலைப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தாக்கம்

கலைப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தாக்கம்

2 mins read
eaf243c6-fd22-48a1-b47a-c99e31ce31f5
செயற்கை நுண்ணறிவை எப்படி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதை ஆராய குழு ஒன்றை 2024ல் லா சால் கல்லூரி அமைத்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கலை நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மாணவர்கள் எவ்வாறு, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றன.

அண்மைய மின்னிலக்கக் கருவிகளால் படைப்பாற்றல்கள் மறுவடிவம் பெற்று வருகிறது. அதாவது, ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு கருவிகள் (ஏஐ) பலவற்றில் ஓர் அங்கமாகி வருகின்றன. கலைப் படைப்புகளிலும் அது ஊடுருவி வருகிறது.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பாரம்பரிய முறை கற்பித்தலுக்கும் எதிர்கால செயற்கை நுண்ணறிவுகளுக்கு ஆயத்தப்படுத்துவதற்கும் இடையே ஒரு சமநிலையைக் கண்டறிவதில் கலை நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

2024ல் லா சால் கலைக் கல்லூரியில், ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தையும் அதை எப்படி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதையும் ஆராய ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதே ஆண்டில் மாணவர்கள் தங்களுடைய ஒப்படைப்புகளில் எந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவுகளைப் பயன்படுத்தலாம் என்பதை ஆசிரியர்கள் தீர்மானிக்க உதவும் ஒரு வழிகாட்டியையும் அது அறிமுகப்படுத்தியது.

கலைப்பள்ளியில் (SOTA), சோதனைமுறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிந்தனையைத் தூண்டும், யோசனைகளை ஆராயும், படைப்புகளைச் செம்மையாக்கும் போன்ற தெளிவான கற்றல் நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன என்று அந்த கல்வி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கருவிகளை வயது வரம்பு, அவற்றுக்கான விதிமுறைகளுடன் ஆசிரியர்கள் மேற்பார்வையுடன் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள், தங்களுடைய ஒப்படைப்புகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதா என்பதையும் அறிவிக்க வேண்டும்.

நன்யாங் நுண்கலைக் கழகத்தில் படைப்பாற்றல் மிக்க பரிசோதனைகள் மற்றும் ஆய்வுக்காக செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சில மாணவர்களும் ஆசிரியர்களும் ஆராய்ந்து வருவதாக அதன் கல்விப் பிரிவின் உதவி தலைவரான சோங் கெங் ஹுவா கூறினார்.

புத்தாக்கச் சிந்தனைகளுக்கு ஒரு கற்றல் துணையாக செயற்கை நுண்ணறிவை மாணவர்கள் பயன்படுத்தி வருவதாக லா சால் தலைவர் வெங்க புருஷோத்தமன் கூறினார்.

தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதை கண்காணிப்பதற்குப் பதிலாக ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய ஊக்குவிப்பதை மாணவர்கள் பாராட்டுவதாக அதன் பணிக்குழு கண்டறிந்தது.

அதே சமயம், பள்ளிகள் மாணவர்களை மதிப்பிடும் முறையை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுகலைபள்ளி