தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த இரு வாரங்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும்

1 mins read
ab0ba5f2-068e-46fa-9a31-3deeda3ad15a
சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது. மழை பெய்தாலும், பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாக அநேகமாக தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரு வாரங்களுக்குப் பருவக்காற்று நிலவரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக நிலையம் வெள்ளிக்கிழமை (மே 16) தெரிவித்தது.

வரும் நாள்களில் காலையில் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்வதோடு பலத்த காற்றும் வீசக்கூடும்.

இரண்டாவது வாரத்தில் தீவின் சில பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்யக்கூடும்.

கடந்த இரு வாரங்களில் இருந்ததைப் போன்றே அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கும். சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை எட்டக்கூடும்.

அடுத்த இரு வாரங்களுக்கு மொத்த மழைப்பொழிவு கிட்டத்தட்ட சராசரி அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.

பருவக்காற்று நிலவரம் காரணமாக சிங்கப்பூரில் கடந்த இரு வாரங்களில் பெரும்பாலான நாள்களில் மிதமானதும் கனமழையாகவும் பெய்தது.

குறிப்புச் சொற்கள்