தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சார கனரக வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகைகள்

2 mins read
1b866804-8138-462e-9ed0-8ad95c9ab612
சிங்கப்பூரின் மொத்த கரிம வெளியேற்றத்தில் போக்குவரத்துத் துறை ஏறக்குறைய 15 விழுக்காடு பங்கு வகிக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கனரக வாகனங்கள், பேருந்து உரிமையாளர்கள், மின்சார வாகனங்களுக்கு மாற சலுகைகள் வழங்கப்படும். போக்குவரத்துத் துறையால் ஏற்படும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.

இது தொடர்பிலான மின்னேற்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்துவதற்கான பகுதியளவு நிதியை ஒரு புதிய மானியம் மூலம் அரசாங்க அமைப்புகள் வழங்கும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு எவ்வாறு விரிவுபடுத்தப்படலாம் என்பது குறித்து அரசாங்கம் தொடர்ந்து ஆராயும் என்றும் அவர் சொன்னார்.

“வாகனங்களை மின்சாரமயமாக்குவதுடன், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிப்பதால் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்,” என்றார் அவர்.

மின்சாரக வாகன ஊக்குவிப்புத் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத கனரக வாகனங்களின் பயன்பாட்டை வேகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மற்ற வாகன வகையைவிட கனரக வாகனங்கள் மின்சாரமயமாவது மெதுவாக இருப்பதாக திரு வோங் கூறினார்.

ஆண்டுக்கு ஏறக்குறைய $1 பில்லியன் பங்களிக்கும் எரிபொருள் தீர்வைக் கட்டண இழப்பை ஓரளவு ஈடுசெய்வதற்காக, கனரக மின்சார வாகனங்களுக்கும் மின்சாரப் பேருந்துகளுக்குமான சாலை வரி உயர்த்தப்படும்.

மின்சார கார்களுக்கும் இலகு சரக்கு வாகனங்களுக்கும் ஏற்கெனவே நடப்பில் உள்ள வரி அம்சம், கனரக மின்சார வாகனங்களுக்கும் பேருந்துகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றார் பிரதமர் வோங்.

சிங்கப்பூரின் மொத்த கரிம வெளியேற்றத்தில் போக்குவரத்துத் துறை ஏறக்குறைய 15 விழுக்காடு பங்கு வகிப்பதை அவர் சுட்டினார்.

அனைத்து வாகனங்களும் 2040க்குள் தூய்மையான எரிசக்தியில் இயங்குவதில் சிங்கப்பூரின் இலக்கை திரு வோங் மறுவுறுதிப்படுத்தினார். இதில் மின்சார, ஹைபிரிட் வாகனங்களும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்