கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம்; சந்தேக நபர் திருட்டு வழக்கில் கைது

கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம்; சந்தேக நபர் திருட்டு வழக்கில் கைது

1 mins read
317a9a10-4afc-45e3-a9fe-61161b2e8648
பிளாண்டேஷன் கிரசண்டில் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்திலிருந்து 100 வெள்ளி ரொக்கத்தைத் திருடியதாக 56 வயது சந்திரன் சின்னத்தம்பி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - படம்: சின் மின் நாளிதழ்

கார்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட தொடர் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது திருட்டுக் குற்றச்சாட்டு செவ்வாய்க்கிழமை (மே 5) சுமத்தப்பட்டது.

மே 3ஆம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் புக்கிட் பாத்தோக் சாலைக்கு அருகிலுள்ள பிளாண்டேஷன் கிரசண்டில் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்திலிருந்து 100 வெள்ளி ரொக்கத்தைத் திருடியதாக 56 வயது சந்திரன் சின்னத்தம்பி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தெங்கா, புக்கிட் பாத்தோக் வட்டாரங்களில் கார்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்குப் புகார்கள் பல வந்ததாகக் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

பாதிக்கப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

காவல்துறையில் காணொளிக் கருவிகளில் பதிவான காட்சிகளைப் பயன்படுத்தி, ஜூரோங் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த சிங்கப்பூரரின் அடையாளத்தைக் கண்டறிந்து, புகார் பெறப்பட்ட 13 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்தனர்.

சந்திரன்மீதான தற்போதைய குற்றச்சாட்டு வாகனம் ஒன்றில் நடந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், கார்கள் பலவற்றைச் சேதப்படுத்தியது, அவற்றிலிருந்து பொருள்களைத் திருடியது ஆகிய வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்