தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதவி கேட்கும் அழைப்புகள் அதிகரிப்பு; புதிய வளாகத்திற்கு மாறிய ‘ஸ்கேம்‌ஷீல்டு’ நிலையம்

1 mins read
ae752e9e-7fcd-43dc-9409-67a69ab2b672
‘ஸ்கேம்‌ஷீல்டு’  உதவி நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொலைப்பேசி அழைப்புகள்மூலம் மோசடி செய்யப்பட்டவர்களுக்கு ‘ஸ்கேம்‌ஷீல்டு’ (ScamShield) ஊழியர்கள் உடனடியாக உதவி வழங்குகின்றனர்.

மோசடிகளிலிருந்து மக்களை விரைவாகக் காக்க 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘ஸ்கேம்‌ஷீல்டு’ உதவி நிலையம் தொடங்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 10 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

1799 என்ற அந்த உதவி எண்ணுக்குத் தொடக்க காலத்தில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 30 அழைப்புகள் வந்தன. ஆனால் தற்போது முகவர்கள் 500 முதல் 700ஆக வரையிலான அழைப்பைப் பெறுகின்றனர்.

உதவிக்கான அழைப்புகள், ஓராண்டில் மட்டும் 128,000க்கும் அதிகமாக வந்தன.

தேசிய குற்றத்தடுப்பு மன்றம், இந்த உதவி எண் சேவையை நடத்தி வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உதவிக்கான அழைப்புகளைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் பிடோக் சவுத்தில் அவென்யூவில் உள்ள செர்டிஸ் ஈஸ்ட் கோஸ்ட் நிலையத்திற்கு ‘ஸ்கேம்‌ஷீல்டு’ உதவி நிலையம் மாற்றப்பட்டது.

இதற்கு முன்னர் அது நியூ பிரிட்ஜ் ரோட்டில் உள்ள காவல்துறை கெண்டோன்மண்ட் வளாகத்தில் இருந்தது.

‘ஸ்கேம்‌ஷீல்டு’ d உதவி நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டைக் கொண்டாடும் விதமாகத் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்