சரக்கு வாகனங்களுக்கான பிரிவைத் தவிர மற்ற அனைத்து வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகரித்துள்ளது.
சிறிய வகை கார்களுக்கான கட்டணம் $94,000லிருந்து $96,000ஆக ஏற்றம் கண்டது.
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 5.8 விழுக்காடு அதிகரித்தது.
அப்பிரிவுக்கான கட்டணம் $103,010லிருந்து $109,000ஆக உயர்ந்தது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் 4.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
அப்பிரிவுக்கான கட்டணம் $104,001லிருந்து $108,992ஆக அதிகரித்தது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 6.4 விழுக்காடு அதிகரித்து $8,381ஆகப் பதிவானது.
இதற்கு முன்பு அது $7,878ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 0.6 விழுக்காடு குறைந்தது.
அது $70,289லிருந்து $69,890ஆகக் குறைந்தது.