சிஓஇ கட்டணங்களில் அதிகரிப்பு

சிஓஇ கட்டணங்களில் அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Apr 2025 - 6:37 pm

1 mins read

ஏப்ரல் 9ஆம் தேதி, புதன்கிழமையன்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கார்களுக்காக வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) கட்டணங்கள் உயர்ந்த பிறகு, சில காலத்துக்கு வாகனங்களின் சிஓஇ கட்டணங்கள் அதிகரித்தே இருக்கும் என்று கருதப்படுகிறது.

‘ஏ’ பிரிவுக்கான இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்த $94,502 சிஓஇ கட்டணம் 3.4% அதிகரித்து $97,724 என்று பதிவானது. இந்தப் பிரிவு சிறிய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமானது.

பெரிய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘பி’ பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $116,890லிருந்து 0.9% அதிகரித்து $117,899 என்று பதிவானது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $116,991லிருந்து $11 அதிகரித்து $117,002 ஆனது.

வர்த்தக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கான சிஓஇ கட்டணம் $70,089லிருந்து 1.9% சரிந்து, $68,782 ஆனது.

மோட்டார் சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $9,511லிருந்து நான்கு விழுக்காடு கூடி, $9,889 என்று பதிவானது.

குறிப்புச் சொற்கள்
வாகன உரிமைச் சான்றிதழ்நிலப் போக்குவரத்து ஆணையம்சான்றிதழ்