எல்லா பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் அதிகரிப்பு

எல்லா பிரிவுகளிலும் சிஓஇ கட்டணம் அதிகரிப்பு

1 mins read
b2873391-a305-4b2d-a611-e266676e0718
வழக்கத்துக்கு மாறாக இம்முறை மூன்று வார இடைவெளிக்குப் பிறகு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்துக்கான ஏலக்குத்தகை நடவடிக்கை இடம்பெற்றது. - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் எல்லாப் பிரிவுகளிலும் கூடியுள்ளது.

குறைந்த சக்திகொண்ட மின்சார வாகனங்களை உள்ளடக்கிய சிறிய கார்களுக்கான ‘ஏ’ பிரிவில் சிஓஇ கட்டணம் இதுவரை இல்லாத அளவு அதிகமாக 133,009 வெள்ளியாகப் பதிவானது. அப்பிரிவில் கடந்த சிஓஇ ஏலக்குத்தகை நடவடிக்கையில் பதிவானதைவிட கட்டணம் 3.5 விழுக்காடு அதிகரித்தது.

‘ஏ’ பிரிவில் இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் பதிவான 129,000 வெள்ளிதான் ஆக அதிகமானதாக இருந்துவந்தது.

கூடுதல் சக்திவாய்ந்த மின்சாரக் கார்களை உள்ளடக்கிய பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவில் சிஓஇ கட்டணம் 3.1 விழுக்காடு கூடி 135,001 வெள்ளியாகப் பதிவானது. அப்பிரிவில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு கட்டணம் இவ்வளவு அதிகமாகப் பதிவாகவில்லை.

பொதுவாக இரு சிஓஇ ஏலக்குத்தகை நடவடிக்கைகளுக்கு இடையே இரண்டு வாரங்கள் இருக்கும். இம்முறை மூன்று வார இடைவெளிக்குப் பிறகு நடவடிக்கை நடத்தப்பட்டது.

கூடுதல் ஒரு வாரகாலத்தில் அதிக விண்ணப்பங்கள் சேர அவகாசம் இருப்பதாக விநியோகிப்பாளர்கள் கூறினர்.

பொதுப் பிரிவான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 2.1 விழுக்காடு கூடி 137,890 வெள்ளியாகப் பதிவானது.

வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் கட்டணம் 3.4 விழுக்காடு அதிகரித்து 90,002 வெள்ளியாகப் பதிவானது.

மோட்டார் சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் கட்டணம் 11.1 விழுக்காடு அதிகரித்தது. அப்பிரிவில் கட்டணம் 12,556 வெள்ளியாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சிஓஇ கட்டணம்வர்த்தகம்கார்வாகனம்ஏலக்குத்தகை