தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீட்டு விலை அதிகரிப்பு

2 mins read
72805bc1-570c-421d-9744-b7897390581d
2024ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் எக்சிக்யூட்டிவ் கொண்டோமினியங்களைச் சேர்க்காமல் விற்பனைக்கு விடப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை 206.7 விழுக்காடு உயர்ந்தது. - படம்: சிம் லியான் குழுமம்

தனியார் வீட்டு விலை 2024ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் 2.3 விழுக்காடு ஏற்றம் கண்டது.

பல புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டது இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தனியார் வீட்டு விலை 0.7 குறைந்ததாகவும் இரண்டாவது காலாண்டில் 0.9 விழுக்காடு அதிகரித்ததாகவும் ஜனவரி 2ஆம் தேதியன்று நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த அடிப்படையில் தனியார் வீட்டு விலை குறியீட்டின் வளர்ச்சி மெதுவடைந்தது. அது 3.9 விழுக்காடாகப் பதிவானது.

2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான வருடாந்தர விலை அதிகரிப்பு.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது தனியார் வீட்டு விலை 2.2 விழுக்காடு அதிகரித்தது.

2023ஆம் ஆண்டில் 6.8 விழுக்காடாகவும் 2022ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாகவும் அது பதிவானது.

2024ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் எக்சிகியூட்டிவ் கொண்டோமினியங்களைச் சேர்க்காமல் விற்பனைக்கு விடப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை 206.7 விழுக்காடு உயர்ந்தது.

நான்காவது காலாண்டில் 3,398 வீடுகள் விற்கப்பட்டன.

மூன்றாவது காலாண்டில் 1,108 வீடுகள் விற்கப்பட்டன.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் விற்கப்பட்ட புதிய வீடுகளின் பெரும்பாலானவை (82 விழுக்காட்டுக்கும் மேல்) சுவான் பார்க், எமரால்டு ஆஃப் காத்தோங், நவா குரோவ், தி கலெக்டிவ் அட் சோஃபியா, யூனியன் ஸ்குவேர் ரெசிடன்சஸ், நோவோ பிளேஸ் இசி ஆகிய ஆறு புதிய திட்டங்களைச் சேர்ந்த வீடுகளாகும்.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் 3,295 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.

2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3,049 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்