அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 55 முதல் 70 வயதிற்குட்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான மத்திய சேம நிதிப் பங்களிப்பு விகிதம் 1 முதல் 1.5 விழுக்காட்டுப் புள்ளி உயர்த்தப்படவிருக்கிறது.
இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இதனை அறிவித்தார்.
55 முதல் 60 வயதுப் பிரிவினருக்கான மசே நிதிப் பங்களிப்பு விகிதம் 31 விழுக்காடாக உயரும்; 60 முதல் 65 வயதுப் பிரிவினருக்கு 22 விழுக்காடாக அதிகரிக்கும்.
அதுபோல், 65 முதல் 70 வயதுப் பிரிவினருக்கான மசே நிதிப் பங்களிப்பு விகிதம் 16.5 விழுக்காடாக ஏற்றம் காணும்.
இதனால் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவு அதிகரிப்பைத் தணிக்கும் விதமாக, அடுத்த ஆண்டு மட்டும் நிறுவனங்களின் பங்களிப்பான 0.5 விழுக்காட்டுப் புள்ளியில் பாதியளவை, அதாவது 0.25 விழுக்காட்டுப் புள்ளியை அரசாங்கம் ஈடுகட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

