சிங்கப்பூரில் ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படும் நோய் அபாயம் அதிகரித்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் பறவைகள் செல்லும் பாதையில் சிங்கப்பூர் இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மனிதர்களுக்கு நோய் பரப்பும் உயிரினங்களில் கொசுக்கள் முதலிடத்தில் உள்ளன. அதை அடுத்து, ஒட்டுண்ணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
ஒட்டுண்ணிகள் மூலம் பரவும் நோய் தொடர்பான புரிதல் போதுமான அளவுக்கு இல்லை என்று கருத்தரங்கில் பங்கேற்ற விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.
இரண்டு நாள் கருத்தரங்கில் கிட்டத்தட்ட 100 ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் பறவைகள் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் நோய்வாய்ப்படும் நிலை அதிகரித்திருப்பதை தொற்றுநோய் ஆணையத்தின் கொள்களைகள், திட்டங்கள் பிரிவுத் துணைத் தலைமை நிர்வாகியான இணைப் பேராசிரியர் பெக் யீ யாங் கூறினார்.
சிங்கப்பூரில் பசுமை இடங்கள், இயற்கை வனப்பகுதிகள், வனவிலங்குப் பசுமைப் பாதைகள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்திருப்பதாகவும் இதன்மூலம் ஒட்டுண்ணிகள் மூலம் நோய் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒட்டுண்ணிகளை எதிர்கொள்ளவும் அவற்றின் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் காண ஆகஸ்ட் 28லிருந்து 29ஆம் தேதி வரை கருத்தரங்கு நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
21 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதில் கலந்துகொண்டனர்.