சிங்கப்பூர்க் கடைத்தொகுதிகளில் அதிகரிக்கும் கார் விற்பனை நிலையங்கள்

சிங்கப்பூர்க் கடைத்தொகுதிகளில் அதிகரிக்கும் கார் விற்பனை நிலையங்கள்

2 mins read
662956e4-eb31-4d1f-9015-ebf8474e9c94
வரும் மாதங்களில் ‘பிடோக் மால்’ கடைத்தொகுதியில் டெஸ்லா தனது விற்பனை நிலையத்தைத் திறக்க உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வாகனத் துறை அதிகப் போட்டியைச் சந்தித்துவருவதால் கார் விற்பனையாளர்கள் கடைத்தொகுதிகளில் விற்பனை நிலையங்களைத் திறந்து வருகின்றனர்.

கடந்த 18 மாதங்களில் திறக்கப்பட்ட 13 கார் விற்பனை நிலையங்களில் ஒன்பது கடைத்தொகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இவ்வாண்டின் பிற்பகுதியில் பிடோக்கில் குறைந்தபட்சம் ஒரு கடைத்தொகுதியில் கார் விற்பனை நிலையம் உதயமாக உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வழக்கமாக லெங் கீ, உபி, அலெக்சாண்ட்ரா போன்ற பிரபல கார் விற்பனை வட்டாரங்களில் உள்ள விற்பனையகங்களுக்கு வாடிக்கையாளர்கள் நேரில் வருவதை மட்டுமே விற்பனையாளர்கள் இனி நம்பியிருக்கப் போவதில்லை என்பதைப் புதிய நிலவரம் உணர்த்துகிறது.

அதற்குப் பதில், கடைத்தொகுதிகளில் தங்கள் விற்பனை நிலையங்களை அமைத்து, காரை வாங்கும் எண்ணம் ஏதுமின்றி அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் உணவருந்த வருபவர்களை ஈர்க்க கார் விற்பனையாளர்கள் முயன்று வருகின்றனர். அதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

மேலும், அதிகமான கார் விற்பனை நிலையங்களைத் திறக்க வேண்டும் என்ற உந்துதல் வாகனத் துறைப் போட்டியாளர்களிடம் காணப்படுகிறது. கடைத்தொகுதியாக இருந்தாலும் வர்த்தகக் கட்டடங்களாக இருந்தாலும் அங்குப் புதிய கார் விற்பனை நிலையங்களைத் திறக்க அவர்கள் ஆர்வம் காட்டிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அதிகம் விற்பனையான கார்களில் டெஸ்லா முதலிடத்தில் உள்ளது. இனி வரும் மாதங்களில் ‘பிடோக் மால்’ கடைத்தொகுதியில் அது தனது விற்பனையகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரின் கடைத்தொகுதியில் அமெரிக்க மின்சார வாகன நிறுவனம் ஒன்றின் நேரடி விற்பனையகம் திறக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கெனவே மில்லேனியா வாக், வெஸ்ட் கேட் ஆகிய பகுதிகளில் அவற்றை டெஸ்லா திறந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கார்விற்பனைபோட்டி

தொடர்புடைய செய்திகள்