தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் கைதான சிங்கப்பூரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

1 mins read
f4340e43-88c2-4097-8d2b-1e9e78775959
அல்வின் சிங் கா மெங்,  2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவுக்கு சட்டவிரோதமாகத் தப்பியோடினார்.  - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு

போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் போதைப்பொருள்களைக் கடத்தியது தொடர்பாக சந்தேகிக்கப்பட்ட சிங்கப்பூர் ஆடவர் இம்மாதம் 1ஆம் தேதி மலேசியாவில் பிடிபட்டார்.

அல்வின் சிங் கா மெங் என்ற அந்த 37 வயது ஆடவர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு பேருடன் இணைந்து இரு போதைப்பொருள் பொட்டலங்களை கடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

பிணையில் இருந்த அவர் விதிமுறைகளை பின்பற்றாததால் கைது ஆணை பிரப்பிக்கப்பட்டது. அதனால் அல்வின் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவுக்கு சட்டவிரோதமாகத் தப்பியோடினார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் மலேசியாவில் இருந்த அல்வின் அக்டோபர் 20ஆம் தேதி சிங்கப்பூருக்கு கொண்டுவரப்பட்டார்.

தற்போது அல்வின் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர் மீதான விசாரணை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அல்வின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 15 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்