இணையம் வழி குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மூன்று சீன நாட்டவர்களுக்கு உதவியதாக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால், 35 வயது திரு கோ ஷி யோங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது.
வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடலின்போது இந்த முடிவை மாவட்ட நீதிபதி இங் செங் தியாம் எடுத்தார்.
இதே குற்றம் தொடர்பாகத் திரு கோ மீது மீண்டும் குற்றம் சுமத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்த பிறகு குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
33 வயது லியூ யுக்கி, 36 வயது ஹுவாங் கின் செங், 39 வயது யான் பெய்ஜியான் ஆகியோருக்கு உதவியதாக திரு கோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அந்த மூவரும் வசித்த வீட்டிற்கு இரண்டு சிங்டெல் இணையச் சேவைகளைப் பெற திரு கோ உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் இந்த நால்வரும் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் திரு கோ மட்டும் சிங்கப்பூரர்.
மற்றவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

