தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிக்குத் துணைபோனதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
73b436ac-22de-4431-98c3-f64eeb25a2e8
சோங் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புகொள்ளவில்லை.  - படம்: பிக்சாபே

தமது வங்கிக் கணக்கு விவரங்களை இணையத்தில் சந்தித்த நபருக்கு 53 வயது சோங் டக் மெங் வழங்கியதாகக் கூறப்பட்டது.

அந்தக் கணக்கில் கிட்டத்தட்ட $59,000க்கும் அதிகமான பணம் மோசடியால் பாதிக்கப்பட்ட எழுவரின் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தப் பணத்தை ‘கிரிப்டோ’ நாணயமாக மாற்றிய சோங், அவற்றை தான் இணையத்தில் சந்தித்த நபரின் கணக்குக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றங்களுக்காக சோங்மீது பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் கட்டணச் சேவைகள் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொள்கிறார்.

சோங் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புகொள்ளவில்லை. இந்த வழக்கு மார்ச் 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

2021ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் $59,750 பணத்தை ‘கிரிப்டோ’ நாணயமாக சோங் மாற்றியதை முதற்கட்ட விசாரணையில் காவல்துறை கண்டறிந்தது.

மேலும், அந்த மின்னிலக்க நாணயங்களை வேறு இரு கணக்குகளுக்கு அவர் மாற்றியதால், அவை குற்றச்செயல்களில் இருந்து கிடைத்த பணம் என்பதை அறிந்தே, அதனைப் பயன்படுத்தி வாங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்டுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் உரிமமின்றி சோங் கட்டணச் சேவைகள் வழங்கியதாகவும் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்