பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
d9f26c88-e395-43d8-9b5a-3e3743c5419d
சிங்கப்பூருக்குள் அனுமதியில்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைத் துப்பாக்கிகளைக் காவல்துறை கைப்பற்றியிருக்கிறது. - படம்: சிங்கப்பூர் காவல்படை

சிங்கப்பூருக்குள் அனுமதியில்லாமல் 154 பொம்மை துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மார்ச் 6ஆம் தேதி 33 வயதான இங் ஜி ஷெங் பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இறக்குமதி, ஏற்றுமதி விதிமுறையின்படி பொம்மைத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு காவல்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

2023 மார்ச் 14க்கும் 2023 மே 11க்கும் இடையே அவர் குற்றங்களைச் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அவர் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனக்காக வாதாட வழக்கறிஞர் ஒருவரை அமர்த்திக்கொள்ளவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்