தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்கு வருகை தரும் இந்தோனீசிய அதிபர்

2 mins read
cba53e44-9165-4e94-97fb-58ea5acf5944
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசுவார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. - படம்: சாவ்பாவ்

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திங்கட்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூருக்கு வருகை தருகிறார்.

அதிபர் பதவியேற்ற பின்னர் திரு பிரபோவோ சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனீசிய அதிபராக அவர் பொறுப்பேற்றார்.

இந்தோனீசிய அதிபருக்கு நாடாளுமன்றத்தில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்தது.

அதிபர் பிரபோவோ, அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்தித்துப் பேசுவார். இந்தோனீசிய அதிபரைக் கௌரவிக்கும் வகையில் அதிபர் தர்மன் தலைமையில் விருந்துபசரிப்பு நடக்கும்.

ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர் - இந்தோனீசியத் தலைவர்கள் சந்திப்பையொட்டி பிரதமர் லாரன்ஸ் வோங்கை அதிபர் பிரபோவோ சந்திக்க இருக்கிறார். இருவரும் தலைமைத்துவப் பதவி ஏற்றதும் பலமுறை சந்தித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் பிரபோவோவின் பதவி ஏற்பு விழாவை நேரில் காண கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் வோங், இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் சென்றிருந்தார்.

இரு தலைவர்களும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ய இருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

தற்காப்பு, பசுமைப் பொருளியல், இணைப்பு போன்ற முக்கிய அம்சங்களில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே நீண்டகால நட்புறவு, ஒத்துழைப்பு இருந்து வருவதாக அது தெரிவித்தது.

அதிபர் பிரபோவோவுடன் இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் அயர்லாங்கா ஹார்டோனோ, வெளியுறவு அமைச்சர் சுஜியோனோ, தற்காப்பு அமைச்சர் ஸ்ஜாஃப்ரி சம்சுதீன், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சர் பஹ்லில் லஹாடாலியா, அமைச்சரவை செயலாளர் டெட்டி இந்திரா விஜயா முதலியோர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அதிபர் பிரபோவோவின் சிங்கப்பூர் பயணத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (ஜூன் 16) நாடாளுமன்றத்திற்கும் ராஃபிள்ஸ் சிங்கப்பூர் ஹோட்டலுக்கும் அருகில் உள்ள சாலைகளைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ராஃபிள்ஸ் பிளேல் வட்டாரத்துக்கு அருகில் உள்ள இவ்விரு இடங்களிலும் உள்ள வாகனங்கள் சோதனைக்கு உட்படும் என்று காலவ்துறை தெரிவித்துள்ளது.

பார்லிமெண்ட் பிளேசின் வலது தடம், நார்த் பிரிட்ஜ் சாலைக்கும் 4எஃப் விளக்குக் கம்பம் வரை திங்கட்கிழமை (ஜூன் 16) அதிகாலை 4 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மூடப்படும்.

அதே நாளன்று பிற்பகல் 12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி வரை நார்த் பிரிட்ஜ் சாலையில் சியா ஸ்திரீட்டிலிருந்து 61எஃப் விளக்குக் கம்பம் வரை இடது பக்கத்தில் உள்ள இரண்டு சாலைத் தடங்கள் மூடப்படும்.

குறிப்புச் சொற்கள்