மூதாட்டியை 39 முறை கன்னத்தில் அறைந்ததாக இந்தோனீசியப் பெண்மீது குற்றச்சாட்டு

மூதாட்டியை 39 முறை கன்னத்தில் அறைந்ததாக இந்தோனீசியப் பெண்மீது குற்றச்சாட்டு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 12:56 pm

1 mins read

மூதாட்டியைக் குறைந்தது 39 முறை கன்னத்தில் அறைந்தது, அவரது வாயில் மெல்லிழைத்தாளைத் (டிஷ்யூ) திணித்தது உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் 41 வயதுப் பெண் ஒருவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தோனீசியாவைச் சேர்ந்த குரியா துலானி ஜமினா எனும் அப்பெண், அந்த 88 வயது மூதாட்டியை வற்புறுத்தி உணவு ஊட்டியதாகவும் திங்கட்கிழமை (நவம்பர் 23) குற்றம் சாட்டப்பட்டது.

அம்மாது மீது ஆறு தாக்குதல் குற்றச்சாட்டுகளும் மற்றொருவர்மீது குற்றவியல் ரீதியான பலத்தைப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஹாலந்து குளோஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கும் இடையிலான தொடர்பு குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.

வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் நவம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள ஒருவரைத் தாக்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும், குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள்வரை சிறை அல்லது $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மூதாட்டிதுன்புறுத்தல்குற்றச்சாட்டுமாது