தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவைத் தலைவரின் முக்கியப் பொறுப்பு பற்றி இந்திராணி ராஜா விளக்கம்

2 mins read
0a1d26d8-2737-4555-b85c-a572d7f68e42
நாடாளுமன்ற அவைத் தலைவரான இந்திராணி ராஜா அவைத் தலைவர் பொறுப்புக்கு உள்ள முக்கியத்துவம் பற்றி விளக்கியிருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்ற அவைத் தலைவரான இந்திராணி ராஜா அவைத் தலைவர் பொறுப்புக்கு உள்ள முக்கியத்துவம் பற்றி விளக்கியிருக்கிறார்.

முந்தைய பதவிக் காலத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவது, நாடாளுமன்ற சிறப்புரிமையைக் கட்டிக்காப்பது ஆகியவை அவைத் தலைவரின் முக்கிய பங்காக இருந்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் உள்ளடக்கி இப்பணிகளின் பெரும்பகுதியை முறைப்படுத்துதல் என்று குறிப்பிடலாம் என்றார்.

நாடாளுமன்ற கேள்வி பதில் அங்கம், மசோதாக்கள், தீர்மானங்கள் ஆகியவற்றில் எதுவாக இருந்தாலும் சரியான வகையில் முறைப்படுத்துதல் நாடாளுமன்றத்தின் முக்கிய பணி. சுருக்கமாக பொதுமக்கள் வெளிப்படையாக அவை நடப்புகளை முறையாகப் புரிந்துகொள்வதற்கான பொறுப்பு என்று அவர் கூறினார்.

ஜூலை 4ஆம் தேதி தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சென்ற மாதம் 20ஆம் தேதி (ஜூன் 20) குமாரி இந்திராணியை அவைத் தலைவர் பொறுப்புக்கு நியமிப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

அதாவது 15வது நாடாளுமன்றம் முதல் முறையாக செப்டம்பர் 5ஆம் தேதி கூடும்போது அவர் இரண்டாவது தவணைக்கு அவைத் தலைவராகச் செயல்படுவார்.

அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும்போது பொதுமக்களின் அக்கறைக்குரிய அம்சங்கள் எழுப்பப்படலாம். அதற்கு உடனடியாக அதிகாரிகளின் விளக்கம் தேவைப்படும் என்று குமாரி இந்திராணி ராஜா தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கூடும்போது பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீடிக்கலாம்.

ஒவ்வொரு முறை கூடும்போது முதல் 90 நிமிடங்கள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏறக்குறைய 100 கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்யலாம். அவற்றில் முக்கியமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அமைச்சர்கள் அவற்றுக்குப் பதிலளிக்கவும் உறுப்பினர்கள் மேலும் விளக்கம் கேட்கவும் முடிகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்