இணையத்தில் பிரபலமாக வலம் வரும் யமாகுச்சி கடைத் திருட்டில் ஈடுபட்டதற்காகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயது யமாகுச்சி அவரது வீட்டில் இரவு 10 மணி முதல் 6 மணிவரை இருக்க வேண்டும். அவரது உடலில் கண்காணிப்பு கருவி இருக்கும்.
மேலும் யமாகுச்சி மூன்று மாதம் அதிகாரிகள் நிலையத்திற்குச் சீரான இடைவெளிகளில் சென்று வரவேண்டும்.
சிறைத் தண்டனைக்கும் அபராதத்திற்கும் மாற்றாக இவ்வகை தண்டனைகள் விதிக்கப்படும்.
பூ விற்பனை மற்றும் அழகு நிலையத்தை நடத்தும் யமாகுச்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்ச்சர்ட் செண்ட்ரலில் உள்ள டான் டான் டான்கி பேரங்காடியில் 628.90 வெள்ளி மதிப்புள்ள பொருள்களைத் திருடினார். யமாகுச்சிக்கு துணையாக அவரது தோழியும் இருந்துள்ளார்.
இருவரும் திருடுவதைக் கண்ட கடை ஊழியர் காவல்துறைக்குப் புகார் கொடுத்தார். அதன்பின்னர் யமாகுச்சி கைது செய்யப்பட்டார்.