சிங்கப்பூரின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணையச்சேவை முழுமையாக மீண்டது

சிங்கப்பூரின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இணையச்சேவை முழுமையாக மீண்டது

1 mins read
d2916467-1a0b-40ac-9293-e7800e59e523
சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 போன்ற நிறுவனங்களின் இணையச் சேவை வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஏற்பட்ட இணையச் சேவைத் தடங்கல் முழுமையாக நீங்கி, வழக்கநிலை திரும்பிவிட்டது.

இதனை, தொலைத்தொடர்புக் கட்டமைப்பு நிறுவனமான ‘நெட்லிங்க் டிரஸ்ட்’ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலை தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டது.

அங் மோ கியோ, பீஷான், செங்காங் மற்றும் பொங்கோல் வட்டாரங்களின் சில பகுதிகளில் காலை 7 மணியளவில் சேவை முழுமையாக மீண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஏற்பட்ட விரிவலை இணையச் சேவைத் தடங்கலில் ஏறத்தாழ 5,000 பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 போன்ற தொலைத்தொடர்புப் பெருநிறுவனங்களும் பாதிக்கப்பட்ட இணையச் சேவை நிறுவனங்களுள் அடங்கும்.

முன்னதாக, இணையச் சேவை பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை நெட்லிங்க் டிரஸ்ட் விளக்கி இருந்தது.

மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரரின் கட்டுமானப் பணிகளால் இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாகச் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அது தனது இணையத்தளத்தில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்