தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலீட்டுத் தர தங்கக் கட்டிகள் அறிமுகம்

1 mins read
c824fea1-ac3e-412a-ae70-0ad63f6f4c24
சிங்கத் தலை சின்னம் கொண்ட தங்கக் கட்டிகள் 1 கிராம் முதல் 1 கிலோ வரையிலான அளவுகளில் கிடைக்கின்றன. - படம்: சிங்கப்பூர் நாணய ஆலை

தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், சிங்கப்பூர் நாணய ஆலை, தனித்துவமான சிங்க உருவத்தைக் கொண்ட முதலீட்டுத் தரத் தங்கக் கட்டிகளை வெளியிட்டுள்ளது.

அனைத்துத் தங்கக் கட்டிகளுக்கும் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் அவற்றுக்குப் பொருள், சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 1 கிராம் முதல் 1 கிலோ வரையிலான அளவுகளில் தங்கக் கட்டிகள் கிடைக்கும். அவற்றின் நேரடி விலைகளை lionbullion.com.sg இணையப் பக்கத்தில் சரிபார்க்கலாம்.

விரைவான நம்பகத்தன்மை சோதனைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு தங்கக் கட்டியும் தனித்தனியாக சீல் வைக்கப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு மின்னிலக்க முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், தங்க விலை வரலாற்று ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் இந்தத் தங்கக் கட்டிகளின் வெளியீடு வந்துள்ளது.

இந்தத் தங்கக் கட்டிகள் சிங்கப்பூர் நாணய ஆலையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேகரிக்கப்படலாம், விநியோகிக்கப்படலாம், சேமிக்கப்படலாம்.

குறைந்தபட்சம் 10 அவுன்ஸ் லயன் புல்லியன் தங்கக் கட்டிகளை வாங்குபவர்கள் ஜூன் 30, 2026 வரை இலவச பாதுகாப்புப் பெட்டகத்தை பயன்படுத்தலாம்.

ஒரு பரிவர்த்தனைக்கு 1 அவுன்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட தங்கக் கட்டிகளின் முதல் 1,000 ஆர்டர்களுக்கு வரையறுக்கப்பட்ட பதிப்பு அடிப்படையில் உலோகப் பதக்கம் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்