சிங்கப்பூருக்கு புகழ் தேடித்தந்த பல உணவு வகைகளில் சில்லி நண்டுக்கு சிறப்பிடம் உண்டு. அதை உருவாக்கியவர் என நம்பப்படும் செர் யாம் தியன் என்பவர் காலமானார். அவருக்கு வயது 90.
1950களில் செர் சில்லி நண்டை உருவாக்கினார். வீட்டில் நண்டு சமைத்துக்கொண்டிருந்தபோது வழக்கமாக பயன்படுத்தும் தக்காளி சாஸ் தீர்ந்துவிட்டது. அதற்கு பதிலாக மிளகாய் சாசை பயன்படுத்தினார். வழக்கத்தைவிட ருசி பலமடங்காக இருந்தது. அன்று அவர் சமையல் அறையில் உருவானதுதான் சில்லி நண்டு.
மரின் பரேட் வட்டாரத்தில் உள்ள ரோலண்ட் உணவகத்தில் திருவாட்டி செர் உருவாக்கிய சில்லி நண்டை சமைக்கும் முறை இன்றுவரை பின்பற்றப்படுகிறது.

