இஸ்தானாவில் கருணை மனுக்கள் கொடுத்தது தொடர்பாக விசாரணை

1 mins read
138f8e75-397b-48a4-a3c4-eda74408fa23
சிங்கப்பூர் அதிபர் மாளிகையான இஸ்தானா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அதிபர் மாளிகையான இஸ்தான்விற்கு இரண்டு கருணை மனுக்களைச் சிலர் கொடுத்துள்ளனர். அந்த மனுக்களைக் கொடுத்தவர்கள் தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மரணத் தண்டனையை எதிர்நோக்கும் நான்கு கைதிகள் தொடர்பாக அந்தக் கருணை மனுக்கள் கொடுக்கப்பட்டன.

ஜூமத் முகம்மது சயத், லிங்கேஸ்வரன் ராஜேந்திரன், தர்சினாமூர்த்தி காத்தையா, சாமிநாதன் செல்வராஜூ ஆகியோர் அந்தக் கைதிகள்.

அவர்கள் நால்வருக்கும் 2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கைதிகளுக்கான தண்டனையைக் குறைக்க மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

“இச்சம்பவம் செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 4.10 வாக்கில் நடந்தது. சிலர் குழுவாக வந்து அந்த மனுக்களைக் கொடுத்துச் சென்றனர்,” என்று காவல்துறை தெரிவித்தது.

இதற்கிடையே தாங்கள்தான் அந்தக் கருணை மனுக்களை அதிபர் மாளிகையில் கொடுத்ததாக Student Actions for Transformative Justice என்னும் குழு தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்திலும் அக்குழு பதிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்