ஈரான் போர் பல நாடுகளையும் பாதிக்கும்: மூத்த அமைச்சர் லீ

ஈரான் போர் பல நாடுகளையும் பாதிக்கும்: மூத்த அமைச்சர் லீ

1 mins read
தற்போது போர் தொடங்கியதை அறியும் நாம் அது எப்போது முடியும் என்பதைக் கணிக்க முடியாது என்றார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
564a0c30-bd42-47ff-8556-040d646fab1f
டெக் கீ தொகுதியில் சனிக்கிழமை (பிப்ரவரி 28) நடந்த சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டெக் கீ தொகுதியில் நடந்த சீனப் புத்தாண்டு இரவு விருந்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 28) கலந்துகொண்டு மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சிறப்புரை ஆற்றினார்.

அந்த உரையில் ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல் எரிவாயு, வர்த்தகம், முதலீடு என பலவற்றைப் பாதிக்கும் என்பதால் சிங்கப்பூர் உட்பட அப்பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள நாடுகளும் போரின் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது போர் தொடங்கியதை அறியும் நாம் அது எப்போது முடியும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் திரு லீ எச்சரித்தார்.

ஏற்கெனவே அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உலகில் நிலைத்தன்மையை மோசமாக்கிவரும் வேளையில் சிங்கப்பூர் போன்ற திறந்த, சிறிய பொருளியலைக் கொண்ட நாடுகள் பெரிதளவு தாக்கத்துக்கு உள்ளாகும் என்று மூத்த அமைச்சர் லீ விளக்கினார்.

கடந்த ஆண்டுகளில் பொருளியல் நல்ல வகையில் வழிநடத்தப்பட்டாலும் நிச்சயமற்றதன்மை தொடர்வதால் அது நீடிக்கும் என்று நாம் இருந்துவிட முடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த இவ்வாண்டு அரசாங்கம் அறிவித்த வரவுசெலவுத் திட்டம் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் முதியோருக்கும் பொதுமக்களுக்கும் பல உதவிகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவுத் திறனை சிங்கப்பூர் ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் திரு லீ அவரது உரையில் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்