சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் (ஐராஸ்) இயக்குநரவைத் தலைவர் பொறுப்புக்குப் புதியவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மே 1 முதல் ஆணையத்தின் இயக்குநரவைத் தலைவர் பொறுப்புக்கு திரு லாய் சங் ஹான் , 52, என்பவரை நிதி அமைச்சு நியமித்து உள்ளது.
திருவாட்டி டான் சிங் யீடமிருந்து அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.
நிதி அமைச்சில் நிதிப் பிரிவு நிரந்தரச் செயலாளரான திரு லாய், இதற்கு முன்னர் அந்த அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவின் நிரந்தரச் செயலாளராக இருந்தார்.
திரு லாய், 2022ல் பொது நிர்வாக தங்கப் பதக்கம் அதிபரால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
2017ல் கல்வி அமைச்சு, உள்துறை அமைச்சுகளின் இரண்டாம் நிரந்தரச் செயலாளராகப் பதவி வகித்த அவர், 2019ல் கல்வி அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆனார்.
2016 மே 1ஆம் தேதி முதல் தலைமைப் பொறுப்பில் இருந்த திருவாட்டி டான், 60, அனைத்துலகத் தரத்திற்கு ஆணையத்தை வலுப்படுத்தியதாக ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

