பொருள் சேவை வரி உயர்வை காரணம் காட்டி நியாயமின்றி விலையை உயர்த்தும் வணிகங்களுக்கு எதிராக எச்சரிக்கை

பொருள் சேவை வரி உயர்வை காரணம் காட்டி நியாயமின்றி விலையை உயர்த்தும் வணிகங்களுக்கு எதிராக எச்சரிக்கை

2 mins read
3cf1d82d-f05c-4b06-9a77-1064056690e1
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொருள் சேவை வரி உயரப்போவதையும் வர்த்தகச் செலவுகள் அதிகரித்துள்ளதையும் முன்னிட்டும் சில வர்த்தகங்கள் தங்கள் விலைகளை உயர்த்தியுள்ளன.

ஆனால் பொருள் சேவை வரி அதிகரிப்பால்தான் விலையை உயர்த்தி உள்ளதாக அவை கூறி வருவதாகவும் அத்தகைய சம்பவங்கள் விசாரிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் வருமான வரித் துறை கூறியுள்ளது.

விலையை அல்லது சேவைக் கட்டணத்தை உயர்த்தும்போது அதற்கான காரணத்தை வெளிப்படையாக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்படி அரசாங்கம் வர்த்தகங்களுக்கு நினைவூட்டுவதாக வருமான வரித் துறை கூறியது.

அது குறித்த ஆலோசனை அறிக்கை அதன் இணையத்தளத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 23) அன்று வெளியிடப்பட்டது.

வர்த்தகங்கள், பொருள் சேவை வரி உயர்வை விலை உயர்வுக்கான முக்கிய அல்லது முழு காரணமாகத் தவறாகக் காட்டக்கூடாது என்று வருமான வரித் துறை கூறியது.

பொருள் சேவை வரி, தற்போது 7 விழுக்காடாக உள்ளது. வரும் ஜனவரியில் அது 8 விழுக்காடாகவும் 2024ல் 9 விழுக்காடாகவும் உயர்த்தப்படும்.

கொள்ளை லாபம் ஈட்டுதலுக்கான செயற்குழு, பொருள் சேவை வரி உயர்வை சாக்காகப் பயன்படுத்தி விலையை நியாயமின்றி உயர்த்துவதைக் கடுமையாகப் பார்ப்பதாக வருமான வரித் துறை கூறியது.

அது பற்றி கிடைக்கும் எல்லா தகவல்களையும் செயற்குழு விசாரிக்ககும் என்றும் அது சொன்னது.

கொள்ளை லாபம் ஈட்டுதலுக்கான செயற்குழு, பொருள் சேவை வரி 1994ல் தொடங்கப்பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதம் அது மீண்டும் கூட்டப்பட்டது.

இதற்கு முன்னர் பொருள் சேவை வரி உயர்த்தப்பட்ட நேரங்களில் அந்த செயற்குழு மீண்டும் கூட்டப்பட்டிருந்தது.