சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தானாவில் பொது வரவேற்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் அங்கு சிங்க நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கண்டு மகிழலாம்.
சீனப் புத்தாண்டின் நான்காம் நாளான அன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இஸ்தானா பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இதனை அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை (ஜனவரி 27) தெரிவித்தது.
ஐந்து கல் போன்ற கம்போங் விளையாட்டுகள், அமர்ந்தநிலை காற்பந்து, கண்கட்டிய காற்பந்து போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.