வடக்கு - தெற்கு ரயில் பாதையில் மரினா சவுத் பியர் நிலையத்தை நோக்கிச் செல்வோர் தங்கள் பயண நேரத்தில் கூடுதலாக 25 நிமிடங்களைச் சேர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
உட்லண்ட்ஸ் - ஈசூன் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பயணம் தாமதமாகக்கூடும்.
ரயில் கோளாறு அதற்குக் காரணம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஈசூனுக்கும் உட்லண்ட்சுக்கும் இடைப்பட்ட நிலையங்களில் இலவச பேருந்துச் சேவைகளை வழங்கியுள்ளதாகவும் நிறுவனம் சொன்னது.
உட்லண்ட்ஸ் நிலையத்திலிருந்து வடக்கு-தெற்கு ரயில் பாதைக்குப் பதிலாக தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் பாதையைப் பயன்படுத்தும்படி எஸ்எம்ஆர்டி நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செப்டம்பர் முதலாம் தேதி வட்டப் பாதையில் ஏற்பட்ட சேவைத் தடங்கலால் மூன்று நிலையங்கள் பாதிக்கப்பட்டன. வட்டப் பாதையும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.