பெருவிரைவு ரயிலுக்குள் சிறுநீர் கழித்த ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த 37 வயது மெக்சுவான் சுவாபிட் என்ற ஆடவர் பொது இடத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை (மார்ச் 18) ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஒரு வார சிறையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
கூட்டமான ரயிலில் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக வெறும் அபராதம் மட்டும் விதித்தால் போதாது என்று நீதிபதி சலினா குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி சமர்செட் வட்டாரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மெக்சுவான் மது அருந்தியதாகச் சொன்னார்.
ஒரு புட்டி நிறைய வைன் மதுபானம் குடித்துவிட்டு இரவு சுமார் 8 மணிக்கு வீடு திரும்ப நினைத்த மெக்சுவான் ஜீரோங் ஈஸ்ட் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறினார்.
அங் மோ கியோவுக்கும் காத்தீப்புக்கும் இடைப்பட்ட நிலையங்களில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது ஆடவர் சிறுநீர் கழித்ததாகத் தெரிகிறது.
மெக்சுவான் பெரிய தவறு செய்திருப்பதை உணர்வதாக நீதிமன்றத்தில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலத்தில் மதுபானத்தைவிட்டு விலகப்போவதாகவும் அவர் சொன்னார்.
பெருவிரைவு ரயில் நிலையங்களில் இவ்வாண்டு சிறுநீர் கழித்த மேலும் இரண்டு ஆடவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.