தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐசிஏ அதிகாரிக்கு $8 லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தவருக்கு சிறை

1 mins read
870ba8b2-d696-464f-a2f8-65866c0fe6be
அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வியட்னாமியர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) அதிகாரி ஒருவருக்கு 8 வெள்ளி லஞ்சம் கொடுத்து காபி குடிக்கப் பயன்படுத்தும்படி கூறிய ஆடவருக்கு ஜனவரி 10ஆம் தேதி நான்கு மாதம், ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வியட்னாமிய நாட்டவரான டிரான் புவோங் ஹாவ், 29, தடுத்து வைக்கப்பட்டபோது தப்பிச் செல்லவும் முயற்சி செய்தார்.

ஜனவரி 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். அவற்றில் ஒன்று ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றொன்று அதிகாரியை கடமை செய்ய விடாமல் தடுத்தது.

சம்பத்தை பற்றி விவரித்த அரசாங்க துணை வழக்கறிஞர் ஸேவியர் டான், 2024 நவம்பர் 11ஆம் தேதி வியட்னாமிலிருந்து சிங்கப்பூர் வந்த டிரானின் உடைமைகளை ஐசிஏ அதிகாரி சோதனையிட்டதாகக் கூறினார்.

அப்போது அவரிடம் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த சமயத்தில் தன்னை சீக்கிரமாக சோதனையிட்டு அனுப்புமாறு கேட்டுக் கொண்ட டிரான், அதிகாரியின் இடதுபக்க சட்டைப் பாக்கெட்டில் நான்கு இரண்டு வெள்ளி நோட்டுகளை திணித்தார்.

“ஏன் பணம் கொடுக்கிறாய்” என்று அதிகாரி கேட்டதற்கு, “உங்களுக்குத்தான், காபி வாங்கி குடியுங்கள்” என்று டிரான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்