பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தோட்டக்காரருக்கு 8 ஆண்டு சிறை, 4 பிரம்படிகள்

தனியார் அடுக்குமாடி குடியிருப்பு (கொண்டோமினியம்) ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் பணிபுரிந்த இல்லப் பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியது, பாலியல் ரீதியில் துன்புறுத்தியது ஆகியவற்றுக்காக அதே வளாகத்தில் பணிபுரிந்த தோட்டக்காரர் ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, நான்கு பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் முகமது சஹ்ரிஃபுல் எனும் 26 வயதான பங்ளாதேஷி ஆடவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒரு குற்றச்சாட்டை நேற்று (பிப்ரவரி 4) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயது பணிப்பெண் ஒரு தொட்டிச் செடியை விட்டுச் செல்ல தோட்டத்திற்குச் சென்றார்.

அங்கிருந்த இஸ்லாமைப் பார்த்து முகமன் கூறிய அவர், தோட்டத்தின் மேல்மாடிக்கு தொட்டிச் செடியை வைக்கச் சென்றார். அவரை இஸ்லாம் பின் தொடர்ந்தார்.

தொட்டியை வைத்துவிட்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்த அவரை பின்புறமாக இருந்து கட்டியணைத்த இஸ்லாம் அவரிடம் முறைதவறி நடந்துகொண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விடுவிக்கப் போராடிய அந்தப் பெண் நிலத்தில் விழுந்தார். அவருக்குப் பின்னால் அமர்ந்த இஸ்லாம் அவரது தோள்களைப் பற்றியதுடன், அந்தப் பெண்ணின் கால்களை நகரவிடாமல் தடுத்தார்.

அவரிடமிருந்து தப்பிக்க முயன்று தோற்ற அந்தப் பெண்ணை இஸ்லாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.

அந்தப் பெண் சத்தமாகக் கூச்சலிட்டதை அடுத்து, அந்தப் பெண்ணை விடுவித்த இஸ்லாம் அவரிடம் மன்னிப்பு கோரினார்.

அந்த தனியார் குடியிருப்பு நிர்வாகத்திடமோ அல்லது போலிசிடமோ இது குறித்து புகார் செய்ய வேண்டாமென பெண்ணிடம் கேட்டுக்கொண்டார் இஸ்லாம்.

ஆனால், அந்தப் பெண்ணின் முதலாளி, சம்பவம் குறித்து போலிசில் புகாரளித்தார்.

யாரும் இஸ்லாமைப் பிரதிநிதிக்காத நிலையில், தன் குடும்பத்தின் நிதிப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு கூடிய விரைவில் பங்ளாதேஷுக்குத் திரும்ப விரும்புவதாக இஸ்லாம் கூறினார்.

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்கு இஸ்லாமுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, பிரம்படிகள், அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

#தமிழ்முரசு
#Gardener
#Bangladeshi
#Filipino

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!