பொறியியல் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் 2020ஆம் ஆண்டில் காரை ஆபத்தான முறையில் ஓட்டி பாதசாரி ஒருவர் மீது மோதினார். இதற்கு முன்னர், வாகனத்தை அதிவேகமாக ஓட்டியது போன்ற பல்வேறு குற்றங்களை அவர் புரிந்திருந்தார்.
விபத்தின் காரணமாக 37 வயது மாதிற்கு முதுகுத்தண்டிலும் கையின் மேற்பகுதியிலும் முறிவுகள் ஏற்பட்டன.
‘வா சொன் என்ஜினியரிங்’ நிறுவனத்தின் இயக்குநரான 51 வயது லிம் ஹீ ஜூக்கு செவ்வாய்க்கிழமையன்று 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி காரை ஆபத்தான முறையில் ஓட்டி, திருவாட்டி கிரேஸ் ஒங்கிற்குக் காயங்கள் ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
லிம் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளிலிருந்து 42 மாதங்களுக்கு எந்த வகை வாகன உரிமம் வைத்துக்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிம் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் சுனில் சுதீசன் கூறினார்.

