லஞ்சம் வாங்கிய முன்னாள் துணைக் காவற்படை அதிகாரிக்குச் சிறை

லஞ்சம் வாங்கிய முன்னாள் துணைக் காவற்படை அதிகாரிக்குச் சிறை

1 mins read
a9dc799a-6887-4a17-ae4b-1f2c0d512ee8
ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட திரு முருகன் சண்முகத்திற்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் துணைக் காவற்படை அதிகாரி ஒருவர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மூன்று முறைக்கு மேல் சட்டவிரோதப் பாலியல் மருந்துகளை விற்ற ஒருவரிடமிருந்து மொத்தம் $750 லஞ்சம் பெற்றிருந்தார்.

சீனாவைச் சேர்ந்த 33 வயது சென் டொங்லியாங்கிடமிருந்து திரு முருகன் சண்முகம், 30, அந்தப் பணத்தைப் பெற்றதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தத்தின்படி, அந்தச் சீனருக்கு எதிராக அவர் அமலாக்க நடவடிக்கையை எடுக்கக்கூடாது.

பாதுகாப்பு நிறுவனமான ‘செர்டிஸ்’இல் தற்போது பணிபுரியாத திரு, ஓர் ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு மே 31ஆம் தேதி ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியரான அவருக்கு $750 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களின் வழக்கு முன்னதாக நடைபெற்றது. அவர்களில் ஒருவர் 30 வயது பாதுகாப்பு அதிகாரியான முகம்மது ஹஃபிஸுடின் ஹனாப்பியா.

ஹஃபிஸுடினுக்கு கடந்த ஜனவரி மாதம் மூன்று மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொருவர், முன்னாள் துணைக் காவற்படை அதிகாரியான 66 வயது முகம்மது அரிஸ் ஜலில். அவருக்கு மே 7ஆம் தேதி ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திரு, லஞ்சம் பெற்றதற்குக் கைமாறாக, சட்டவிரோதப் பாலியல் மருந்துகள் விற்றவர்களிடம், நடக்கவிருந்த சோதனை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்