வழக்கறிஞராக செயல்பட தடை விதித்திருந்தும் சட்ட சேவைகளை வழங்கி அதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணமும் பெற்றுக் கொண்ட முன்னாள் வழக்கறிஞருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெலன் சியா சிவி இம், 55, நொடித்துப் போனதால் வழக்கறிஞராகச் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.
மே 26ஆம் தேதி தம் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஒன்று ஏமாற்றுவது, மற்றொன்று வழக்கறிஞராகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்டவர்போல நடித்தது.
இரண்டு வாடிக்கையாளர்கள் தொடர்பான சம்பவங்களால் சியாவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக தற்காப்பு வழக்கறிஞர் நிக்கோலஸ் நாராயணன் நீதிமன்றத்தில் தெரிவித்ததை நீதிபதி லீ சுட்டிக்காட்டினார்.
பெண் வாடிக்கையாளர் ஒருவரை 2015ல் சியா பிரதிநிதித்தார். அந்த வாடிக்கையாளரின் குழந்தையை தந்தை கொலை செய்துவிட்டார்.
இந்நிலையில் சியாவுக்காக வருந்துவதாகத் தெரிவித்த நீதிபதி, அவரது மனஉளைச்சலுக்கும் தற்போதைய அவரது குற்றச்செயலுக்கும் தொடர்பு இருப்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றார்.

