சிங்கப்பூர் மீன்பண்ணை ஒன்றில் இருந்து விலை மதிப்புமிக்க ‘அல்பினோ ஸ்டிங்ரே’ (albino stingray) வகை மீனை திருடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 28) எட்டு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மீன் $1,380 (US$1,040) விலை மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டது.
லீ டி யுவான் என்னும் ஆடவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
வேலையில்லாத அந்த ஆடவர், சியென் ஹு மீன் பண்ணையில் உள்ள தொட்டி ஒன்றில் இருந்து விலையுயர்ந்த மீனைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.