வழக்கறிஞர் சான்றிதழ் இல்லாமல் 32 முறை தனது கட்சிக்காரர்களுக்காக நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையான லிம் தியெனுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி ஆறு வாரச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 9 வரை அவர் நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரர்களைப் பிரதிநிதித்தார்.
தண்டனை விதிக்கப்படும்போது பேசிய மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சன், அங்கீகரிக்கப்படாத நபராக சான்றிதழ் இல்லாமல் செயல்பட்ட லிம் எந்தவித வருத்தமும் காட்டவில்லை என்றார்.
இதே போன்ற குற்றங்களை பிறர் செய்வதைத் தடுக்க இத்தகைய தண்டனை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2024 ஜூலையில் 60 வயது எதிர்க்கட்சி அரசியல்வாதியான லிம், விசாரணைக்குப் பிறகு மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

