விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்குச் சிறை

1 mins read
1fc118df-ffd7-416b-a834-dbc0c31b4a32
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சைக்கிளோட்டி சாலையில் பாதையைக்கடக்கும் போது, அவர் மீது லாரியை மோதிக் கொன்ற ஓட்டுநருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விபத்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நடந்தது. விபத்து நடந்த சில மணி நேரத்திலேயே அப்துல் அஸிஸ் சயித் முகமது என்ற 64 வயது ஆடவர் மாண்டார்.

விபத்தை ஏற்படுத்திய உடையப்பன் வசந்த் என்ற 25 வயது வெளிநாட்டு ஊழியர் தம்மைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற சக ஊழியரான ராஜேந்திரன் செல்லதுரையைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கேட்டும் உள்ளார்.

விபத்து நடக்கும் போது லாரியில் இருவரும் இருந்தனர். விசாரணையின் போது ராஜேந்திரன் தாம் தான் லாரியை ஓட்டியதாகக் கூறினார்.

ஆனால் சைக்கிளோடி மாண்டதையடுத்து ஆடவர்கள் யார் விபத்தை ஏற்படுத்தினர் என்ற உண்மையை ஒப்புக்கொண்டனர்.

கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டியதற்கும் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்க முயன்றதற்கும் உடையப்பனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

கூடுதலாக எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடையப்பனுக்கு உதவ நினைத்த ராஜேந்திரனுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்துலாரி