பேருந்துக்குள் நுழைந்து ஓட்டுநரின் கைப்பேசியைப் பிடுங்கி வீசியவருக்குச் சிறை

1 mins read
ee6f4655-3148-459a-a02b-ade57e255824
குற்றத்தை ஒப்புக்கொண்ட டியோவுக்கு நீதிமன்றம் 5 நாள் சிறையும், $3,000 அபராதமும் தண்டனையாக விதித்தது. - படம்: தி ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓல்டு தெம்பனிஸ் ரோட்டின் அருகில் உள்ள ஃபுளோரா ரோட்டில் பேருந்து எண் 4 பயணம் செய்த பாதையை, விமானப் பணியாளரான டியோ கியான் சின் 43, தமது வாகனத்தைக் கொண்டு வழிமறித்திருக்கிறார். பேருந்து தொடர்ந்து முன்னே செல்ல டியோவின் கார் தடையாக இருந்ததால் ஓட்டுநர் பேருந்தின் “ஹார்ன்” ஒலியை எழுப்பினார்.

அதனால் கோபமடைந்த டியோ, பேருந்துக்குள் புகுந்து, சம்பவத்தை காணொளியெடுத்துக் கொண்டிருந்த ஓட்டுநரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கி தரையில் வீசியெறிந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22 அன்று இரவு 11 மணிக்கு அவ்வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் இச்சம்பவத்தை காணொளியாக எடுத்தார். அது சமூக ஊடகத்தில் பரவியது. குற்றவாளியான டியோவுக்கு நீதிமன்றம் 5 நாள் சிறையும், $3,000 அபராதமும் தண்டனையாக விதித்தது.

அவர் குற்றம் புரியும் எண்ணத்துடன் செய்த அத்துமீறல், துன்புறுத்தல் ஆகிய இரு குற்றங்களை ஒப்புக்கொண்டார். வீடுதலைக்குப் பிறகு, எவ்வித வாகன உரிமங்களையும் வைத்திருக்க ஒரு மாத தடையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்