கட்டடங்களின் முகப்பை மூடுவதற்கான சாதனங்களை விற்பனை செய்த ஆடவர், அவை தீ பாதுகாப்புச் சான்றிதழைப் பெற்றவை எனத் தம்மிடமிருந்து அவற்றை வாங்கிய ஒப்பந்ததாரர்களிடம் பொய் கூறினார்.
இந்தக் குற்றத்தைப் புரிந்த பென்னி புவா சியா பிங்கிற்கு செப்டம்பர் 30ஆம் தேதியன்று இரண்டு ஆண்டுகள், ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் மூன்று நிறுவனங்களை ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் டோ குவான் சாலையில் நிகழ்ந்த தீச்சம்பவத்துடன் புவாவின் அப்போதைய முதலாளியான சிப் சூன் அலுமினியம் நிறுவனத்துக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
அந்தத் தீச்சம்பவத்தில் பெண் ஒருவர் மாண்டார்.
இதையடுத்து, புவாவின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
புவா ஏமாற்றி விற்பனை செய்த மூன்று நிறுவனங்களுக்கும் அந்தத் தீச்சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை.
கவனக்குறைவுடன் நடந்துகொண்டதாகவும் புவா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதுதொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதில் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் அக்டோபர் 24ஆம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.