காதலியின் அனுமதி இல்லாமல் அவர் தூங்கும் போதும் குளிக்கும்போதும் காணொளி எடுத்த 23 வயது ஆடவருக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் செய்யும்போது அந்த ஆடவருக்கு 19 வயது என்றும் அப்போது அவர் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகத்தில் படித்து வந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆடவர் குற்றச்செயலில் ஈடுப்பட்டார்.
2022ஆம் ஆண்டு காதலர்களுக்கு இடையே முறிவு ஏற்பட்டது. அதன்பின்னர் ஆடவர் அப்பெண்ணை சமூக ஊடகம் வழி தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த ஆடவர் அப்பெண்ணின் நிர்வாணப் படங்களை அவரின் சகோதரருக்கு அனுப்பினார். அதன் பின்னர் அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆடவரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
ஆடவர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரைக் காக்கும் விதமாக குற்றவாளியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.