சாலையில் ஏற்பட்ட விவாதம் ஒன்று சண்டையாக மாறிப் பின்னர் அது தாக்குதலாக மாறியுள்ளது.
சன்னி டான் பூன் ஹெங் என்னும் 68 வயது ஆடவர் லின் யான்சாங் என்னும் 61 வயது ஆடவரைக் கத்தரிக்கோல் கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் லின்னுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டது.
இச்சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி மாலை 5 மணிவாக்கில் பிடோக் ரெசர்வார் ரோட்டை நோக்கிச் செல்லும் பிடோக் நார்த அவென்யூ 3ல் நடந்தது.
சாலையின் இடது தடத்தில் டான் சென்று கொண்டிருந்தார். வலது பக்கத்தில் லின் சென்றுகொண்டிருந்தார்.
தமக்கு முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல லின் திடீரென இடது தடத்தில் புகுந்தார். இதனால் டான் ஆத்திரமடைந்தார்.
அதன்பின்னர் இருவரும் போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்தில் இருந்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் அது சண்டையாக மாறியது. சிறிய அளவில் காயமடைந்த லின் டான்மீது வழக்குத் தொடுத்தார்.
காயம் ஏற்படுத்தியதற்காகவும் ஆபத்தான முறையில் நடந்து கொண்டதற்காகவும் டானுக்கு 5 வாரச் சிறைத் தண்டனையும் 6 மாதம் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
டான் தன்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

